தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபை தமிழ்நாடு – மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபை தமிழ்நாடு நிறுவனத் தலைவர் தமிழர் குல பேரரசு ஏ.ஏ. ராமர் பாண்டியர் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 30-07-2022 அன்று மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி.பட்டியலில் இருந்து வெளியேற்றக் கோரியும், சாதிவாரியான விகிதாச்சார அடிப்படையில் இடபங்கீடு வழங்கும்படியும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாமல்ல பாண்டியன் தோ.ம.ஜான்சன், உலகத்தமிழர் பாசறை நிறுவனர் ச.எழிலரசு இளங்கீரன், சமூக நீதிப் போராளி சி.மள்ளர் சுவாமிநாதன், கோரிப்பாளையம் முஸ்லிம் ஜமாத் தலைவர் எஸ்.சையத் இப்ராஹிம், வாடிப்பட்டி ஒன்றியத்தலைவர் மணிக்காளை, பல்லாவரம் சைமன், பல்லாவரம் ஜான் முத்தையா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி சிறப்புரை நிகழ்த்தினார்கள்

Leave a Reply

Your email address will not be published.