ஏ.ஆர்.எஸ். இன்டர்நேஷனல் ஆர்கெஸ்ட்ராவின் துவக்க விழாவை முன்னிட்டு 20 பாடகர்கள் மற்றும் 20 பாடகிகள் பங்குபெற்ற மாபெரும் இசை நிகழ்ச்சி

ஏ.ஆர்.எஸ். இன்டர்நேஷனல் ஆர்கெஸ்ட்ராவின் துவக்க விழாவை முன்னிட்டு , 20 பாடகர்கள் மற்றும் 20 பாடகிகள் பங்குபெற்ற மாபெரும் இசை நிகழ்ச்சியானது தி.நகரிலுள்ள சர்.பி.டி தியாகராஜர் ஹாலில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை எங்களின் பெருமதிப்பிற்குரிய Dr.R.சிவகுமார் IPS ஐயா அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார் . அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக , நான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை , விழா குழுவினரோடு இணைந்து ஒருங்கிணைத்தேன். மேலும் இந்நிகழ்வில் இந்திய இஸ்லாமிய முன்னேற்றக் கூட்டமைப்பின் தலைவர் திரு.அ.முகமது புரோஸ்கான் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார் . இந்த இசைநிகழ்வில் நம் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.எஸ்.ராஜா , மாநில கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு.C.தமிழ்செல்வன் , திருநின்றவூர் பகுதியின் கலைத்துறை செயலாளர் , பேராசிரியர். கவிஞர் திரு .பு.மகேந்திரன்,ஊடகத்துறை பொறுப்பாளர் திரு.A.அருண் . மூத்த பத்திரிகையாளர் திரு.K.தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

வரலாற்று சிறப்பு மிக்க இந்த உலக சாதனை இசை நிகழ்ச்சியை தமிழ்நாடு போலீஸ் பயிற்சி அகாடமி துணை இயக்குனர் டாக்டர் ஆர்.சிவக்குமார் ஐபிஎஸ் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலத் தலைவர் மனிதநேயச் செம்மல் டாக்டர் கலைமகன் எஸ்.வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.