சென்னை அடையார் பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்எவலுசியான் கலை விழா 2022

0 minutes, 0 seconds Read

எவலுசியான் கலை விழா 2022
சென்னை அடையார் பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் எவலுசியான்’ 2022 கலை விழா நடைபெற்றது. மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன 20 மற்றும் 21 அக்டோபர் மாதத் தேதிகளில் அரங்கப் போட்டிகள் நடைபெற்றன 27, 28 அக்டோபர் மாதத் தேதிகளில் மேடைகளில் நடைபெறுகின்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டியின் நிறைவு விழா 28 அக்டோபர் நடைபெற்றது.இந்த ஆண்டு கலை விழாவிற்கான கருப்பொருளாக ராஜ வம்சம் என்னும் தலைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டது இந்தியாவின் பண்டைய அரசாட்சி முறையை அரசர்களை அரசிகளை ஆட்சி முறையை பற்றி விளக்குவதாக மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் தங்களின் தனித்திறனை வெளி காட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு ஷாஜி சென் அவர்கள் கலந்து கொண்டார்கள். இவர் எழுத்தாளர் மற்றும் நடிகர் என்னும் பன்முகத் திறனை கொண்டவர். இவர் தன்னுடைய அனுபவங்களை மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார் புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறினார் மேலும் மாணவர்கள் தங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்வதற்காக தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என எடுத்து கூறினார் போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொள்வதன் மூலமாக மாணவர்கள் தங்களையே செதுக்கிக் கொள்ள முடியும் என்னும் கருத்தையும் முன் வைத்தார். இந்த விழாவில் திரு ஸ்ரீ கௌதம் அவர்கள் அசோசியேட் இயக்குனர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் பதக்கங்கள் வழங்கப்பட்டன இந்த எவலுசியான் விழாவின் ஒட்டுமொத்த சாம்பியனாக மேலாண்மைத் துறை வாகை சூடியது. இரண்டாவது பரிசினை வணிக நிறுவமச் செயலாாண்மைத் துறை பெற்றது. மூன்றாவது பரிசை உளவியல் துறை பெற்றது. இந்த போட்டிகளில் மிஸ்டர் எவலுசியானாக உளவியல் துறையை சேர்ந்த திரு நிதிஷ் என்பவரும் மேலாண்மை துறையைச் சார்ந்த திரு. யஷ் என்பவரும் மணிமகுடத்தை பெற்றனர். மேலாண்மை துறையை சார்ந்த செல்வி ரோஷினி அவர்கள் மிஸ் எவல்யூசியான் எனும் பட்டத்தை பெற்றார். அதற்கு அடுத்தபடியாக கருத்து நடை பழகும் போட்டியில் மிஸ்டர் பாட்ரிஷியனாக உளவியல் துறையைச் சார்ந்த திரு ஹேமவேஸ்வரன் அவர்களும் உளவியல் துறையைச் சார்ந்த செல்வி பேர்ல் ஜூடித் ராஜு அவர்களும் மணிமகுடம் சூடினார்கள். இந்த விழாவில் கல்லூரியின் இயக்குனர் மற்றும் செயலாளர் அருட் சகோதரர் டாக்டர் ஸ்டெனிஸ்லாஸ் அவர்களும் கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர் பாத்திமா வசந்த், கல்லூரியின் முதல்வர் டாக்டர் உஷா ஜார்ஜ் கல்லூரியின் துணை முதல்வர் பிரிவு 2 டாக்டர் கீதா ரூபஸ் மற்றும் துணை முதல்வர் பிரிவு 1 ஒன்று டாக்டர் பி மீனா ஆகியோர் கலந்து கொண்டனர் இன்று நடைபெற்ற எவலுசியான் நிகழ்ச்சியின் இறுதி விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *